அந்தியூரில் வி.சி.க., ஆலோசனை கூட்டம்
அந்தியூரில் வி.சி.க., ஆலோசனை கூட்டம்
அந்தியூரில் வி.சி.க., ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 12, 2025 01:44 AM
அந்தியூர், அந்தியூர் வி.சி.க., ஒன்றிய அலுவலகத்தில், திருச்சியில் ஜூன் 14ல் நடக்கும் மதசார்பின்மை காப்போம் பேரணி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மகளிர் விடுதலை இயக்க அந்தியூர் ஒன்றிய செயலர் விஜயா வரவேற்றார். ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் செங்கோடன், மின்வாரிய மண்டல செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் தங்கராசு தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் சுசி கலையரசன், மண்டல செயலர் அம்பேத்கர் ஆகியோர் பேசினர். அந்தியூர், டி.என். பாளையம் ஒன்றியங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை பேரணிக்கு அழைத்து செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.