/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அறிவியல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு அறிவியல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு
அறிவியல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு
அறிவியல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு
அறிவியல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 12, 2025 01:44 AM
கோபி, கோபி, வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், வெட்டையன்கிணறு, சுள்ளிப்பாளையம் கிராமத்தில், வேளாண் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பிரசார முகாம் நேற்று நடந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள், நானோ உரங்கள், கரும்பு ரகங்கள் மற்றும் சாகுபடி குறிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் சீலாமேரி, வளர்மதி, மத்திய வேளாண் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.
கோபி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி பச்சியப்பன், சரவணக்குமார், சீனிவாசன், சிவா, பிரேமலதா ஆகியோர் பங்கேற்றனர். திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.