ADDED : செப் 20, 2025 02:08 AM
தாராபுரம், நாம் தமிழர் கட்சி சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, சுற்றுச்சூழல் கவன ஈர்ப்பு தெருமுனை கூட்டம் நேற்று நடந்தது.
மாநில நிர்வாகி சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் கார்மேகம், அபிநயா பங்கேற்றனர்.