ADDED : செப் 20, 2025 02:08 AM
தாராபுரம், தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள அரிமா அரங்கில், புத்தக கண்காட்சி நேற்றிரவு துவங்கியது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
முதல் விற்பனையை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி வைத்தார். தாராபுரம் பொதுநல அமைப்புகள் இணைந்து நடத்தும் கண்காட்சி வரும், 28ம் தேதியுடன் நிறைவடைகிறது.