/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடிவேரி தடுப்பணையில் வழுக்கி விழுந்து இருவர் காயம் சிகிச்சைக்கு செல்ல வாகனமின்றி அவதி கொடிவேரி தடுப்பணையில் வழுக்கி விழுந்து இருவர் காயம் சிகிச்சைக்கு செல்ல வாகனமின்றி அவதி
கொடிவேரி தடுப்பணையில் வழுக்கி விழுந்து இருவர் காயம் சிகிச்சைக்கு செல்ல வாகனமின்றி அவதி
கொடிவேரி தடுப்பணையில் வழுக்கி விழுந்து இருவர் காயம் சிகிச்சைக்கு செல்ல வாகனமின்றி அவதி
கொடிவேரி தடுப்பணையில் வழுக்கி விழுந்து இருவர் காயம் சிகிச்சைக்கு செல்ல வாகனமின்றி அவதி
ADDED : ஜூன் 14, 2025 07:04 AM
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில் நேற்று காலை, 20 கன அடி தண்ணீர்
வெளியேறியது. இந்நிலையில் வந்த சுற்றுலா பயணிகள் ஒரு சிலர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், வழுக்கி விழுந்-ததில் தலையில் காயம் அடைந்தார். அவரை தொடர்ந்து வேலுார் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இவர்களுடன் வந்த, 12 வயது சிறுவன் அருவியில் குளித்தபோது வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரையும் சிகிச்சைக்காக அக்கரை கொடிவேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அவர்களுடன் வந்தவர்கள் அழைத்து சென்று அவதிக்கு ஆளாகினர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது: தடுப்பணையில் சேதமடைந்த தடுப்பு கம்பிகளின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். நுழைவுச்சீட்டு வழங்கும் பகுதியில்,
முதலுதவி பெட்டி வைக்க வேண்டும்.
அருவி பகுதியில் வழுக்கி விழுவோர் அல்லது நீரில் மூழ்கு-வோரை மீட்டால், சிகிச்சைக்கு உடனடியாக கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தயார்
நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நுழைவு கட்டணம் வசூலிக்கும் நீர்வளத்துறை, சுற்றுலா பயணி-களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினர்.