காவிரி ஆற்றில் கலந்த சாயக்கழிவு நீர்
காவிரி ஆற்றில் கலந்த சாயக்கழிவு நீர்
காவிரி ஆற்றில் கலந்த சாயக்கழிவு நீர்
ADDED : ஜூன் 14, 2025 07:03 AM
ஈரோடு: ஈரோடு கனி ராவுத்தர் குளம், சூளை, சத்யா நகர், மல்லி நகர், வைராபாளையம் பகுதியில் உள்ள சாய, சலவை, பிளீச்சிங் ஆலைகள், தோல் ஆலைகளில் பெரும்பாலானவை, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்காலில் திறந்து விடுவது வாடிக்கை.
நேற்று அதிகாலை முதல் இவ்வாறு திறக்கப்பட்ட சாயக்கழிவு நீர் நீலம், சிவப்பு, கரும் பச்சை, பிரவுன் நிறத்தில், நுரையுடன் பல மணி நேரமாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் ஓடி, காவிரி ஆற்றில் நேரடியாக கலந்தது. சாயக்கழிவு நீர் ஓடு-வது வாடிக்கை என்பதால், அப்பகுதியினர் கண்டு கொள்ள-வில்லை. மதியம், 1:00 மணியை கடந்தும் தொடர்ந்து ஓடி-யதால் ஆசிட் மற்றும் கடும் நெடி நீடித்தது.தாங்களாக முன்வந்து இவ்விடங்களை ஆய்வு செய்யாத மாசுகட்-டுப்பாட்டு வாரியம், வருவாய் துறையினரை உள்ளடக்கிய குழு-வினர், இதுபோன்ற சூழலிலாவது ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.