/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் மேலும் இருவர் கைது காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் மேலும் இருவர் கைது
காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் மேலும் இருவர் கைது
காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் மேலும் இருவர் கைது
காட்டுப்பன்றியை வேட்டையாடிய வழக்கில் மேலும் இருவர் கைது
ADDED : ஜூன் 11, 2025 01:34 AM
டி.என்.பாளையம், ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியை ஒட்டிய வினோபா நகரில், சட்ட விரோதமாக வனவிலங்கு இறைச்சி விற்பனை நடப்பதாக, வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில் வினோபா நகர், மீனவர் காலனி, சின்னையன் தோட்டம் அருகே, மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் ஒரு கிலோ காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தபோது, மூன்று பேருக்கு இறைச்சி விற்கப்பட்டது தெரிய வந்தது.
மேலும் பன்றியை சுடுவதற்கு பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, அப்பகுதியில் புதரில் மறைத்து வைத்திருந்தனர். அதையும் கைப்பற்றினர்.
மூவரும் கொங்கர்பாளையம், வினோபா நகர் குப்புசாமி மகன் நவீன், 23; அங்கப்பன் மகன் வசந்த் பிரியன், 20; குப்புசாமி மகன் அய்யப்பன், 38, என தெரிய வந்தது. மூவர் மீதும் வன உயிரின குற்ற வழக்கில் பதிவு செய்தனர்.
மூவருக்கும் தலா, தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதேசமயம் இவர்கள் அளித்த தகவலின்படி, காட்டுப்பன்றியை வேட்டையாடிய சம்பவத்தில் மேலும் மூன்று பேரை தேடி வந்தனர்.
கொங்கர்பாளையம், வினோபாநகர் அய்யப்பன் மகன் பெரியசாமி, 29, கொடியப்பன் மகன் சின்னையன், 36, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
ஐந்து பேரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கருப்புசாமியை தேடி வருகின்றனர்.