/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 11, 2025 01:34 AM
ஈரோடு, தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கறுப்பு உடை அணிந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் மணிமாலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சம்பத், சோமு, மாவட்ட செயலர் ராஜன், ராதாமணி பேசினர்.
குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய், பணிக்கொடை, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி, 55 சதவீதம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளிலேயே, எஸ்.பி.எப்., - ஜி.பி.எப்., தொகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.