ADDED : ஜூலை 03, 2024 02:42 AM
ஈரோடு:ஈரோடு
மின் பகிர்மான வட்டத்தில், பெருந்துறை கோட்டம் குன்னத்துார்
உபகோட்டத்தில், குன்னத்துார் நகர், கிழக்கு, கிராமியம்,
பல்லக்கவுண்டன்பாளையம் பிரிவு அலுவலகங்கள், திருப்பூர் மாவட்ட
எல்லைக்குள் உள்ளன. இவற்றை அந்தந்த மாவட்ட எல்லைக்குள் மாற்றம் செய்ய
உத்தரவிடப்பட்டது. இதன்படி அவிநாசி மின் கோட்டத்துக்கு கடந்த,
1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில்
இப்பகுதி மின் நுகர்வோரின் மின் கட்டணம், புதிய மின் இணைப்பு என
அனைத்தும், 'செயற்பொறியாளர் (இயக்குதலும்
பேணுதலும்-வினியோகம்), மங்கலம் ரோடு, திருப்பூர் மின் பகிர்மான
வட்டம், அவிநாசி' என்ற முகவரியில் அணுக வேண்டும்.