/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்; தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை புகார்ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்; தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை புகார்
ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்; தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை புகார்
ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்; தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை புகார்
ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்; தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை புகார்
ADDED : ஜூன் 21, 2024 07:42 AM
ஈரோடு: கோபி, நாகர்பாளையம், நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி பிரபா, 48; கோபி, வண்ணாந்துறைப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை.
ஈரோடு எஸ்.பி.,யிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 2014ல் குடும்ப செலவுக்கு, ஈரோடு சொட்டையம்பாளையத்தில் வசிக்கும், ஈரோடு, பெரியார் வீதி, அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமியிடம் என் வீட்டை அடமானம் வைத்து, 15 லட்சம் ரூபாய் பெற்றேன். இதற்கு மாதந்தோறும், 60 ஆயிரம் ரூபாய் வட்டி முறையாக செலுத்தினேன். முழு பணத்தை செலுத்தியும், அடமானத்தை ரத்து செய்து கொடுக்காமல் தாமதம் செய்து வருகிறார். நான் பெற்ற, 15 லட்சத்துக்கு, 60 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் வீட்டை திரும்ப எழுதி தர முடியும் எனக்கூறி, தினமும் அடியாட்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வீட்டு பத்திரத்தை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதுபற்றி முத்து ராமசாமி கூறும்போது, ''நான் பைனான்ஸ் ஏதும் செய்யவில்லை. வீட்டை கிரயத்துக்கு தான் வாங்கியுள்ளேன்'' என்றார்.