/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'பள்ளம்' ஏறினால் 'பள்ளம்' சறுக்குது; முடியாத பாலம் கட்டும் பணியால் பிணி'பள்ளம்' ஏறினால் 'பள்ளம்' சறுக்குது; முடியாத பாலம் கட்டும் பணியால் பிணி
'பள்ளம்' ஏறினால் 'பள்ளம்' சறுக்குது; முடியாத பாலம் கட்டும் பணியால் பிணி
'பள்ளம்' ஏறினால் 'பள்ளம்' சறுக்குது; முடியாத பாலம் கட்டும் பணியால் பிணி
'பள்ளம்' ஏறினால் 'பள்ளம்' சறுக்குது; முடியாத பாலம் கட்டும் பணியால் பிணி
ADDED : ஜூன் 21, 2024 07:42 AM
சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே காட்டாறுகளின் குறுக்கே கட்டப்பட்டு வரும், உயர் மட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில், தமிழக எல்லையாக கடைக்கோடி மலை கிராமமாக மாக்கம்பாளையம் உள்ளது.
சத்தி யூனியனுக்கு உட்பட்ட மாக்கம்பாளையம் ஊராட்சியில் கோம்பையூர், கோம்பைதொட்டி, கோவிலுார், கூத்தம்பாளையம் மலை கிராமங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் என்ற இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். மலை காலங்களில் இவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மாக்கம்பாளையம் மலை கிராமம், பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். வெள்ளம் வற்றும் வரை பிற பகுதிகளுக்கு செல்ல முடியாது. எனவே இரு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, 2022ல் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. மிகவும் மந்தமாக நடக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இதனால் கடந்த மாதம் பெய்த மழையால், இரு பள்ளங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து, மலை கிராமம் வழக்கம்போல் துண்டிக்கப்பட்டது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க மக்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து சத்தி பி.டி.ஓ., சரவணன் கூறியதாவது: மாக்கம்பாளையம் செல்லும் வழியில் கட்டப்பட்டு வரும் பாலம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் பணி முடிந்து விடும். இந்த பாலத்தை பொறுத்த வரை டெண்டர், பணி என அனைத்தும் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை தான். பணிகளை பார்வை மட்டுமே செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.