/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சென்னிமலையில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூன் 09, 2025 03:23 AM
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில், முருகப்பெரு-மானின் அவதார தினமான வைகாசி விசாக விழா, ௬௯வது ஆண்-டாக நேற்று மாலை கோலாகலமாக நடந்தது.முன்னதாக காலை, 10:௦௦ மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு, மலை கோவிலை அடைந்தது. இதை தொடர்ந்து மதியம், 3:௦௦ மணிக்கு கணபதி ேஹாமத்-துடன் விழா துவங்கியது.
கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து, 4:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பல்வேறு அபி-ஷேகம் செய்து, 6:30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்-தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய
தொடங்கினர்.
காங்கேயம் அருகேயுள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள், காவடி தீர்த்த குடங்களுடன், மாலையில் வருகை தந்து முருகப்-பெருமானை வழிபட்டு
சென்றனர்.