/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 62 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கானல் நீராகும் மாணவர்களின் விளையாட்டு திறமை 62 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கானல் நீராகும் மாணவர்களின் விளையாட்டு திறமை
62 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கானல் நீராகும் மாணவர்களின் விளையாட்டு திறமை
62 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கானல் நீராகும் மாணவர்களின் விளையாட்டு திறமை
62 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கானல் நீராகும் மாணவர்களின் விளையாட்டு திறமை
ADDED : ஜூன் 30, 2025 03:53 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 62 அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் விளை-யாட்டு திறன் பாதித்துள்ளது.
பள்ளி, கல்லுாரி பருவத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் மன நலன் மட்டுமின்றி உடல் நலத்தையும் பேணி காக்க உடற்பயிற்சி, விளையாட்டு
அவசியம்.
உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவதால் உடல் வலிமை பெறுவதோடு மனநலமும் மேம்படுகிறது. எனவே பள்-ளிகளில் மாணவ, மாணவிகள் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் செலுத்த நிபுணர்களும், அரசும் அறிவுறுத்தி வருகிறது.ஆனால் ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் போதிய உடற்ப-யிற்சி, விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாதது கேள்விக்குறியாகி வருகிறது. விளையாட்டுகளில் திறன் இருந்தும் கண்டறிந்து ஊக்-குவிக்க ஆசிரியர்கள் இல்லாததால், விளையாட்டு கனவு கானல் நீராகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில், 76 அரசு உயர்நிலை பள்ளி செயல்படுகி-றது. இதில், 51 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை. மொத்தமுள்ள, 113 மேல்நிலை பள்ளிகளில், 11 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. பிறபா-டங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்-களை நியமிப்பது போல் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படு-வதில்லை. துவக்க, நடுநிலை பள்ளிகளில் உடற்கல்விக்கு என ஆசிரியர்களே இல்லை. இதுதவிர பெரும்பாலான அரசு பள்ளி-களில் மாணவ,மாணவிகள் விளையாட மைதானம் இல்லை. மைதானம் இல்லாத நிலை, உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை என பல்வேறு தடைகளை கடந்து அரசு பள்ளி மாணவ, மாண-விகள் விளையாட்டு போட்டிகளில் எவ்வாறு வெற்றியை பதிக்க முடியும்.
ஆனால் தமிழக அரசும் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டி-களை பள்ளி அளவில் நடத்துகிறது. இவற்றில் மைதானம் இல்-லாத, உடற்கல்வி ஆசிரியர் வழிகாட்டுதல் இல்லாத மாணவ,மாணவிகளின் நிலை கேள்விக்குறியானதாகவே இருக்கி-றது.
இதுபற்றி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் கழகத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரி-யர்கள் நியமனம் இல்லை. தற்காலிக
ஆசிரியர்களும் நியமிக்கவில்லை. அதேசமயம் பணி ஓய்வு, பணி-யிட மாற்றம் உள்ளிட்டவற்றால் காலி பணியிடம் அதிகரித்து வரு-கிறது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் இருந்தால் மட்டுமே, உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற நடைமுறை அமலாக உள்ளது. அவ்வாறின்றி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.