ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் திருட்டு
ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் திருட்டு
ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் திருட்டு
ADDED : ஜூன் 17, 2025 01:30 AM
பவானி, பவானி அருகே மயிலம்பாடி, ராம்நகரை சேர்ந்தவர் ராமன், 72; தாலுகா அலுவலக ஓய்வு பெற்ற ஊழியர். மனைவியுடன், உறவினர் திருமண நிகழ்வுக்கு வெளியூர் சென்றவர் நேற்று வீடு திரும்பினார். கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஒரு
பவுன் தோடு, மோதிரம், 5,௦௦௦ ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி பவானி போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.