ADDED : ஜூன் 02, 2025 03:41 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் கடந்த மூன்று நாட்களாகவே மழை பொழி-வற்ற வானிலை காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணி முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தை போன்று தாக்கம் இருந்தது. இதனால் மக்கள் வீடு-களில் முடங்கினர். 36 டிகிரி செல்சியஸ் (97 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது பெற்றோர் மத்-தியில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.