/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய சிறுவர்கள் கைதுஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய சிறுவர்கள் கைது
ஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய சிறுவர்கள் கைது
ஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய சிறுவர்கள் கைது
ஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய சிறுவர்கள் கைது
ADDED : ஜூலை 11, 2024 04:22 AM
கோபி: போட்டோ ஸ்டுடியோவில் கைவரிசை காட்டிய இரு சிறுவர்-களை, கோபி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பகவதிராஜா, 42. இவர் கோபி அருகே பொலவக்காளி-பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்து, கேமரா மற்றும் பிரின்டரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து பகவதிராஜா கொடுத்த புகார்படி, கோபி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கோபி அருகே ஓடத்துறை குளம் அருகே, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த மூவரை கோபி போலீசார் நேற்று மாலை பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் மட்டும் சிக்கினர். மற்றொருவர் தப்பினார்.
விசாரணையில், போட்டோ ஸ்டுடியோவில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இவர் கள் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுவர்கள்; தப்பி ஓடியவர் சென்னையை சேர்ந்த வெள்ளையன், 29, என தெரிந்தது. வழக்கில் சிக்கிய இரு-வரும் மைனர் என்பதால், மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.