ADDED : செப் 21, 2025 01:25 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், 59வது வார்டு கட்டபொம்மன் வீதியில் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டதால், 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின், மாநகராட்சி பொறியாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஓடை அடைப்பு, ஆக்கிரமித்துள்ள செடி-கொடிகளை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், அப்பகுதியில் பணிகளை தொடங்கினர்.