/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வுகுழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 02:40 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம்
தலைமையில் கடந்த மாதம் மாவட்ட அளவில் ஆய்வு நடந்தது.
டெக்ஸ்டைல்,
கார்மென்ட்ஸ், நோட்டு - புத்தகம், வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்யும்
கடைகள், நிறுவனங்கள், இதர கடைகள் என, 86 இடங்களில் ஆய்வு செய்து, 34
கடைகளில் முரண்பாடு காணப்பட்டது. சட்டமுறை எடையளவு குறைபாடுகள்
குறித்து, 100 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், நான்கு கடைகளில்
முரண்பாடு தெரிந்தது.
குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர்
ஒழித்தல் சட்டத்தின் படி, பேக்கரி, உணவு நிறுவனங்கள், விற்பனை
செய்யும் கடைகள், இதர நிறுவனம் என, 315 இடங்களில் ஆய்வு
செய்யப்பட்டதில், எவரும் கண்டறியப்படவில்லை. இத்தகவலை ஈரோடு
தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.