/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
காதல் திருமண தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
ADDED : ஜூலை 05, 2024 02:39 AM
ஈரோடு:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், கண்டிபாளையம், ரவி மகள் மாளவிகா, 20; கணவர் ராம்குமாருடன், 25, வந்து, ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனு: கரூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறேன். ப.வேலுாரை சேர்ந்த சக்திவேல் மகன் டிரைவரான ராம்குமாரும் நானும் இரண்டாண்டாக காதலித்தோம்.
இது தெரிந்து என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி, அவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், கணவருக்கும் என் குடும்பத்தினரால் அச்சுறுத்தல் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.