/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்
10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்
10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்
10, பிளஸ் 1 வகுப்புக்கான துணை தேர்வுகள் துவக்கம்
ADDED : ஜூலை 05, 2025 01:30 AM
ஈரோடு, தமிழகத்தில் பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனித்தேர்வர்களுக்கான துணை தேர்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 துணை தேர்வுகள் எழுத, 2,620 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பவானியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி என, 4 மையங்களில் தேர்வுகள் நடந்தது.
தமிழ் தேர்வில், 384 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 252 பேர் எழுதினர். பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஏழு மையங்களில் தொடங்கியது. தமிழ் தேர்வுக்கு, 773 பேர் விண்ணப்பித்து, 477 பேர் எழுதினர். 296 பேர் பங்கேற்கவில்லை.