Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பாதை அமைக்கும் பணியால் சிக்கல்

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பாதை அமைக்கும் பணியால் சிக்கல்

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பாதை அமைக்கும் பணியால் சிக்கல்

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் பாதை அமைக்கும் பணியால் சிக்கல்

ADDED : ஜூலை 05, 2025 01:30 AM


Google News
ஈரோடு ஈரோடு ப.செ.பார்க் அருகில் கனி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இதில் மூன்று தளங்களில், 346 கடை உள்ளது. முன்னுரிமை அடிப்படையில், 113 கடை ஒதுக்கப்பட்டது. 64 கடைகள் ஏலம் எடுக்கப்பட்டன. மீதி, 169 கடைகள் ஏலம் போகவில்லை.

இந்நிலையில் வளாகத்தின் முன்பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் ஜவுளிகளை கொண்டு வருவதற்கு முன்பக்க நுழைவுவாயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மறுபக்கத்தில் கடைசியில் உள்ள கடைகாரர்களுக்கு, ஜவுளிகளை கடைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் பின்பக்கம் வழியாக பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து பாதையை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன் மாநகராட்சி தொடங்கியது. பெரிய அளவில் கட்டுவதற்கு அடித்தளம் அமைத்து கட்டுமான பணியை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படும் என கடைக்

காரர்கள் குற்றம் சாட்டிள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us