/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர் தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்
தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்
தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்
தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்
ADDED : ஜூலை 05, 2025 01:52 AM
சத்தி, தலைமை ஆசிரியரை இட மாறுதல் செய்ததை எதிர்த்து போராட்டம் நடந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுார் நடுப்பாளையத்தில், அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 88 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக சக்திவேல், 42, பணியாற்றினார். மாணவர், பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றவர். இந்நிலையில் சுழற்சி முறை மாறுதலில், மலைப்
பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையறிந்த பெற்றோர்கள், மக்கள், இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வகுப்புகளை புறக்கணிக்க வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறவே, போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.