/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளகோவில் அருகே பகீர் வெறிநாய் கடித்து 6 ஆடு பலி வெள்ளகோவில் அருகே பகீர் வெறிநாய் கடித்து 6 ஆடு பலி
வெள்ளகோவில் அருகே பகீர் வெறிநாய் கடித்து 6 ஆடு பலி
வெள்ளகோவில் அருகே பகீர் வெறிநாய் கடித்து 6 ஆடு பலி
வெள்ளகோவில் அருகே பகீர் வெறிநாய் கடித்து 6 ஆடு பலி
ADDED : ஜூலை 05, 2025 01:52 AM
வெள்ளகோவில், வெள்ளகோவிலை அடுத்த வேலப்பநாயக்கன்வலசு, குன்னிக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி சதாசிவம், 41; தோட்டத்தில், 21 ஆடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை சென்றபோது ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆறு ஆடுகள் இறந்து கிடந்தன.
வருவாய் துறை, கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த ஆடுகளின் மதிப்பு, 90 ஆயிரம் ரூபாய். நாய்களால் தொடர்ந்து ஆடுகள் பலியாகி வருவது, விவசாயிகள் மத்தியில் வேதனையை அதிகரித்துள்ளது.