/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு
பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு
பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு
பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு
ADDED : ஜூன் 03, 2025 01:39 AM
காங்கேயம், காங்கேயம் அருகே எருக்கலம்காட்டுப்புதுாரை சேர்ந்த தங்கமுத்து மகன் தரணிஷ், 16; காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்தார்.அப்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லி பள்ளி செல்வதை தவிர்த்து வந்தார்.
இதனால் திருப்பூர், கணக்கம்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படிக்கும் வகையில் கடந்த வாரம் சேர்த்தனர். நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.