/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பந்தலுக்கு கட்டப்பட்ட சவுக்கு கட்டையால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி பந்தலுக்கு கட்டப்பட்ட சவுக்கு கட்டையால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி
பந்தலுக்கு கட்டப்பட்ட சவுக்கு கட்டையால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி
பந்தலுக்கு கட்டப்பட்ட சவுக்கு கட்டையால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி
பந்தலுக்கு கட்டப்பட்ட சவுக்கு கட்டையால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி
ADDED : ஜூன் 04, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோடு மாநகரில் சாலை நடுவில், சவுக்கு கட்டை கட்டப்பட்டிருப்பதால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.ஈரோடு மாநகர் ப.செ.பார்க் சிக்னல் முன் எம்.எஸ்.சாலையில், அக்னி வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் விதமாக பசுமை பந்தல் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
பந்தல் காற்றுக்கு விழாமல் இருக்க பக்கவாட்டு பகுதியில் சவுக்கு கட்டை கட்டினர். ஆனால் ஜீப்ரா கிராசிங் கோட்டை மறித்து கட்டப்பட்டது. இதனால் கடந்த, 20 நாளாக ப.செ.பார்க் சிக்னல் முன் எம்.எஸ்.சாலையில் வருவோர் சாலையை கடக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து பாதசாரிகள் கூறியதாவது: இங்கு ஜீப்ரா கிராசிங் கோட்டை தாண்டியே வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்துகின்றனர்.
இந்நிலையில் கோட்டை மறித்து சவுக்கு கட்டை கட்டப்பட்டுள்ளதால் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் சாலையை கடக்க வழிவகை செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.