/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்
ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்
ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்
ஆலை விவகாரத்தில் இரு இடங்களில் போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:19 AM
தாராபுரம்: தாராபுரம் அடுத்துள்ள பொன்னாபுரம் பகுதியில், சுற்றுச்சூழ-லுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கட்டப்பட்டு வரும் தனியார் கார்பன் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்-கோரி, விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
இதற்கு ஆதரவாக, தி.மு.க.,வை சேர்ந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிக்குமாரும் களத்தில் இறங்கியதால், போராட்டம் சூடு பிடித்தது. இந்நிலையில், ஊராட்சி அலுவலகம் அருகே நேற்று சசிகுமார் தலைமையில் உண்ணாவிரதம் தொடர்ந்-தது. போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவகாரம் பெரிதாவதை அறிந்த தாசில்தார் கோவிந்தசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர், மாலை 5:00 மணியளவில் தனியார் ஆலை கட்டப்பட்டு வரும் இடத்தில், அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர். போராட்ட குழுவினர் கூறுகையில், எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும் என்றனர்.