/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்
மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்
மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்
மக்களை அச்சுறுத்திய நாய்களை பிடித்த ஊழியர்கள்
ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
ஈரோடு: ஈரோட்டில், நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பெரியார் நகர் பகுதியில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சு-றுத்தி வந்தன. எனவே, நாய்களை பிடிக்க வேண்டும் என, மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் முறையிட்டனர். அதன்-படி, பெரியார் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த, 10க்கும் மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பிடித்தனர். பின், சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.