Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாரியம்மன் கோவில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்

மாரியம்மன் கோவில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்

மாரியம்மன் கோவில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்

மாரியம்மன் கோவில் கட்டுமான பணி வாக்குவாதத்தால் நிறுத்தம்

ADDED : ஜூலை 25, 2024 01:14 AM


Google News
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோவிலுக்காக கட்-டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், விழாக்குழுவினர் மற்றும் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்-குவாதத்தால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத விழா நடைபெறும். கோவிலுக்கு எதிரே காலியிடம் உள்ளது. இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்த-மானது. மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காகவும், திருவிழா சமயத்தில் முடித்திருத்துவோர் தங்-குவதற்காகவும், காலியிடத்தில் விழாக்குழு சார்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த இடத்துக்கு வந்த திராவிடர் விடு-தலை கழகத்தினர், கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரியும், அங்கு நுாலகம் கட்டுவதற்காக முயற்சித்து வருவதாகவும் கூறினர். இதனால் விழாக்குழுவினர் மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்-துக்கு வந்த தாசில்தார் முத்துகிருஷ்ணன், வடக்கு காவல்நிலைய போலீசார், இரு தரப்பினரிடையே சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, கட்டுமான பணிகள் நடந்து வரும் இடம், கோவி-லுக்கு சொந்தமானது என விழா குழுவினர் சில ஆவணங்களை, தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் காட்டினர். அதேநேரத்தில், சம்-பந்தப்பட்ட இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என, திராவிடர் விடுதலை கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த தாசில்தார் முத்துகி-ருஷ்ணன், இடம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். எனவே, ஆக., 1ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும். அதுவரை கட்டுமான பணிகள் மேற்-கொள்ளக்கூடாது. இருதரப்பு நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்-கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து இரு தரப்-பினரும் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us