/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைநடுமலை மாதேஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை
நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை
நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை
நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 17, 2024 10:49 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், மாட்டுப் பொங்கல் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் சத்தி அருகே புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு நேற்று அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த கோவிலில் மாட்டுப் பொங்கல் நாளில் மட்டுமே வழிபாடு நடப்பது குறிப்பிடத்தக்கது.
கால்நடைகள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், பொங்கல் வைத்தும், மண்ணால் ஆன உருவ பொம்மைகளை வைத்து, விவசாயிகள் மற்றும் மக்கள் வழிபாடு செய்தனர். கோவிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தை கொண்டு வந்து கால்நடைகள் மீது தெளித்தனர்.
குட்டகத்தில்...
புன்செய்புளியம்பட்டியை அடுத்த குட்டகம் கிராமம், மாதேஸ்வரர் மலை கோவிலுக்கு, மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, பல்வேறு கிராமங்களில் இருந்து, மாடுகளுக்கு அலங்காரம் செய்து, மக்கள் நேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோவில் முன் நிறுத்தி, மாடுகளுக்கு பூஜை செய்தனர்.
கால்நடைகளை நோய் தாக்காமல், ஆரோக்கியமாக வாழ, மண் உருவத்திலான மாடு சிலைகளை வைத்து வழிபட்டனர். கோவிலிலேயே மண் சிலை தயாரித்து விற்கப்பட்டது. ஒரு அடி உயர சிலை, 300 ரூபாய், இரண்டு அடி உயர சிலை, 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாதேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், மக்கள் வந்தனர்.


