Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.என்.ஆர்., வித்யா நேத்ரா மெட்ரிக்., பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி

எஸ்.என்.ஆர்., வித்யா நேத்ரா மெட்ரிக்., பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி

எஸ்.என்.ஆர்., வித்யா நேத்ரா மெட்ரிக்., பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி

எஸ்.என்.ஆர்., வித்யா நேத்ரா மெட்ரிக்., பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி

ADDED : மே 21, 2025 01:11 AM


Google News
ஈரோடு :சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் எஸ்.என்.ஆர்.வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி கனிகாஸ்ரீ, 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி பிரதீபா, 494 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், கார்த்தியாயினி, 492 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம், சஞ்சய், 490 மதிப்பெண்கள் எடுத்து நான்காமிடம் பிடித்தனர். 14 பேர் 450-க்கு மேலும், 10 பேர் 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்தனர். அறிவியல் பாடத்தில் மூவர், சமூக அறிவியலில் ஒருவரும் 100/100 மதிப்பெண் பெற்றனர்.

இதேபோல் பிளஸ் -1, பிளஸ்- 2 தேர்வுகளிலும், ௧௦வது ஆண்டாக, ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ராமலிங்கம், துணை தாளாளர் சரவணன், முதல்வர் வனிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us