நந்தா கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா
நந்தா கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா
நந்தா கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா
ADDED : மே 21, 2025 01:11 AM
ஈரோடு, ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லுாரியின், 21வது மற்றும் நந்தா கல்வியியல் கல்லுாரி, 15-வது பட்டமளிப்பு விழா இனிதே நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். கேரளா முன்னாள் ஆளுநர் சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர்
நந்தகுமார் பிரதீப், பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தி பேசினார். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன் மற்றும் நிர்வாக அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். விழாவில், 847 மாணவ, -மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் சதாசிவம், பட்டம் வழங்கி மாணவ பாராட்டி பேசினார். இதில், 19 பேர், பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள். முன்னதாக நந்தா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மனோகரன் ஆண்டறிக்கை வாசித்தார்.