/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்
ADDED : ஜன 06, 2024 07:28 AM
ஈரோடு: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஈரோட்டில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற, மவுன அஞ்சலி ஊர்வலம் நேற்று நடந்தது.
அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் புறப்பட்ட ஊர்வலம் மீனாட்சிசுந்தரனார் சாலை, காந்திஜி சாலை வழியாக காளை மாட்டு சிலை அருகே நிறைவடைந்தது.முன்னதாக ரவுண்டானாவில் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். அங்கிருந்து அனைத்து கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.தி.மு.க., சார்பில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஜீவா ரவி, ஆஜம், காங்., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், பா.ம.க., சார்பில் மாவட்ட தலைவர் பிரபு, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், த.மா.கா., சார்பில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மனித நேய மக்கள் கட்சி சித்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.