/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மருத்துவ சேவையில் 38 ஆண்டாக சத்தி கே.ஜி.ஆர்., மருத்துவமனை மருத்துவ சேவையில் 38 ஆண்டாக சத்தி கே.ஜி.ஆர்., மருத்துவமனை
மருத்துவ சேவையில் 38 ஆண்டாக சத்தி கே.ஜி.ஆர்., மருத்துவமனை
மருத்துவ சேவையில் 38 ஆண்டாக சத்தி கே.ஜி.ஆர்., மருத்துவமனை
மருத்துவ சேவையில் 38 ஆண்டாக சத்தி கே.ஜி.ஆர்., மருத்துவமனை
ADDED : ஜூலை 01, 2025 01:42 AM
ஈரோடு, சத்தியமங்கலத்தில் கொத்தனகார வீதியில், 38 ஆண்டுகளாக, கே.ஜி.ஆர்., சர்ஜிக்கல் நர்சிங் ஹோம் செயல்படுகிறது. மருத்துவ சேவைகள் குறித்து, மருத்துவமனை நிறுவனரும் பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.ஜி.ரங்கநாதன் கூறியதாவது:
இங்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கருப்பை சார்ந்த பிரச்னை, கால்களில் ஏற்படும் வீங்கிய ரத்த நாளம் சார்ந்த பிரச்னை, மார்பக புற்றுநோய் சார்ந்த பிரச்னை, பித்தப்பை கல் பிரச்னை, சிறு நீர் கல், சிறுநீர் பாதை அடைப்பு, கட்டி பிரச்னை, பிராஸ்டேட் சுரப்பி பிரச்னை, உணவு குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், புற்றுநோய் பிரச்னை, மலக்குடல் மற்றும் பெருங்குடல் நோய்களை கண்டறிய உள்நோக்கு கருவி, இரைப்பை மற்றும் உணவுக்குழாய் உள்நோக்கு கருவி, அனைத்து வகை புற்றுநோய்க்கான ஹீமோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருபாகரன், மஞ்சள் காமாலை, குடிப்பழக்கம் உள்ளவர்கள், மீண்டவர்கள், கணையம் சம்மந்தமான நோய் உள்ளவர்கள், கல்லீரல் அலற்சி மற்றும் வீக்கம், குடல் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். விபரங்களுக்கு, 04295-220406, 220587, 94872-42594 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.