மெட்ராஸ் ஐ நோயை கண்டறிவது எப்படி?
மெட்ராஸ் ஐ நோயை கண்டறிவது எப்படி?
மெட்ராஸ் ஐ நோயை கண்டறிவது எப்படி?
ADDED : ஜூலை 01, 2025 01:42 AM
ஈரோடு, கண் பாதுகாப்பு குறித்து கோபி கச்சேரி மேடு ரிஷிக் ஆர்யா கண் மருத்துவமனை டாக்டர் மாலினி கூறியதாவது:
-மழை காலத்தில் மெட்ராஸ் ஐ தொற்று அதிகமாக காணப்படும். மக்கள் நெரிசலான இடங்களில் வேகமாக பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீர் மற்றும் வைரஸ் மூலம் பரவி மற்றவர்களுக்கு ஏற்படுகிறது. மருத்துவர் ஆலோசனைப்படி இதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
40 வயதை கடந்தவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எங்களுடைய மருத்துவமனையில் கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து குறைபாடுகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கண்புரை அறுவை சிகிச்சை. கண் நீர் அழுத்த நோய் சிகிச்சை, நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனைகளும் நவீன முறையில் செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினார்.