/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்தி காந்தி கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு சத்தி காந்தி கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
சத்தி காந்தி கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
சத்தி காந்தி கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
சத்தி காந்தி கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 26, 2025 02:12 AM
சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள, காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி இணைந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் மாரிமுத்து, காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சக்திவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்த்துறை தலைவர் செந்தில் வரவேற்று பேசினார். கல்லுாரி நிர்வாகத்தின் தலைவர் தமிழரசன் வாழ்த்தி பேசினார். கல்லுாரி துணைத் தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் சிராஜுதீன், பொருளாளர் கோவிந்தராஜ், காந்தி கல்வி நிறுவன இயக்குனர்கள் சுலைமான், சுப்பிரமணியம், முகமதுஜமால்காதர், கார்த்தியரசு, ரேணுகாதேவி, உத்தமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பாளராக, சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு கல்வி, ஒழுக்கம், பெண் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லுாரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.