ADDED : ஜூன் 26, 2025 02:12 AM
காங்கேயம், காங்கேயம் கோட்டம், உதவி மின் பொறியாளர் படியூர் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது. க.எண்.135, வடக்குபாளையம் படியூர் என்ற முகவரியில் இயங்கி
வந்த உதவி மின் பொறியாளர் இயக்குதலும் மற்றும் பேணுதலும் அலுவலகம், நிர்வாக காரணங்களால் க.எண் 6/676 கே.என்.கே. வளாகம், ஊத்துக்குளி ரோடு, படியூர் என்ற முகவரியில் நாளை (27ம் தேதி) முதல் செயல்படும் என, காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலா தேவி தெரிவித்துள்ளார்.