தேவர்மலை சாலையை அகலப்படுத்த கோரிக்கை
தேவர்மலை சாலையை அகலப்படுத்த கோரிக்கை
தேவர்மலை சாலையை அகலப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2025 12:59 AM
ஈரோடு, தேவர்மலை சாலையை அகலப்படுத்த வேண்டும், என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அவர்களது மனுவில் கூறியதாவது: அந்தியூர் யூனியன் பர்கூர் மலை பஞ்சாயத்தில், தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை பகுதிக்கு செல்லும் வனச்சாலை, 4.7 கி.மீ., துாரம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இச்சாலையில் ஏற்கனவே இருந்த சாலையின் அகலத்தைவிட தற்போது குறைவாக, அதாவது, 12 அடி அகலம் மட்டுமே புதுப்பித்துள்ளனர். இதனால் எதிர் - எதிரே வரும் வாகனங்கள் விலகி செல்ல வழி இன்றி விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று, இச்சாலையை அகலப்படுத்தி, வாகனங்கள் எளிதில் செல்லவும், விபத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.