Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விட்டு மயானத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை

ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விட்டு மயானத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை

ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விட்டு மயானத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை

ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி விட்டு மயானத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை

ADDED : செப் 16, 2025 01:44 AM


Google News
ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., திருவேங்கடம்பாளையம் சுடுகாடு மீட்பு பணி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லகுமாரசாமி தலைமையில் மனு வழங்கி கூறியிருப்பதாவது:

திருவேங்கடம்பாளையம் ஊரில், 100 ஆண்டுகளுக்கு மேலாக, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக அங்குள்ள சுடுகாட்டில், எங்கள் கிராம மக்களின் இறந்த உடல்களை பாரம்பரிய முறையில், சீர் செய்து புதைக்கிறோம். இயற்கையாக இறந்தவர்கள் உடலை புதைப்பதும், விபத்து, நோய் வாய்ப்பட்டு இறந்தவர்களின் உடலை அதற்கான வழிமுறையில் எரிப்பது என வழக்கத்தை கொண்டுள்ளோம்.

தற்போது சில தனி நபர்கள், நில புரோக்கர்கள் சேர்ந்து அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்குள்ள, 40க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள், 200க்கும் மேற்பட்ட சிறிய மரக்கன்றுகளை பொக்லைன் இயந்திரம் வைத்து அகற்றி, 50க்கும் மேற்பட்ட லோடு மண்ணை அள்ளி சென்றுள்ளனர். இதற்காக டவுன் பஞ்சாயத்து, தாலுகா அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஆக்கிரமிப்பு செய்துள்ளோரிடம் கேட்டால், இவ்விடம், சுடுகாடு என்றும், ஊருக்கு சொந்தமானது என எந்த வருவாய் ஆவணத்திலும் இல்லை என்கின்றனர்.

எனவே இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விசாரித்து, சுடுகாட்டுக்கான இடத்தை வருவாய் ஆவணத்தில் பதிவு செய்து, கிராம பயன்பாட்டுக்கு பட்டாவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us