/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஈரோட்டில் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஈரோட்டில் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஈரோட்டில் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 16, 2025 01:44 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் ஒவ்வொரு மாதமும், 3 வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
பல்வேறு தனியார் துறை வேலை அளிப்போர் பங்கேற்று, தங்களுக்கு தேவையான நபர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள், பட்டப்படிப்பு, செவிலியர்கள், டெய்லரிங், கணினி இயக்குவோர், தட்டச்சர், ஓட்டுனர்கள் என, பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தேவையான நபர்களை தேர்வு செய்து திறன் பயிற்சி வழங்குகின்றனர். இதன்படி வரும், 19 காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதால், தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படாது. 86754 12356 என்ற எண்ணிலும், erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், decgc_erode என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கூடுதல் தகவல் அறியலாம்.