/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் பேரூர் ஆதீனம் வழிபாடுபிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் பேரூர் ஆதீனம் வழிபாடு
பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் பேரூர் ஆதீனம் வழிபாடு
பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் பேரூர் ஆதீனம் வழிபாடு
பிரம்மலிங்கேஸ்வரர் கோவிலில் பேரூர் ஆதீனம் வழிபாடு
ADDED : ஜூலை 07, 2024 02:48 AM
சென்னிமலை:சென்னிமலையை
அடுத்த முருங்கத்தொழுவில், 300 ஆண்டுகள் பழமையான
பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கோவை பேரூர்
ஆதீனம் மருதாச்சல சாந்தலிங்க அடிகளார் நேற்று வந்தார்.
கிராம
மக்கள் சார்பாக பெண்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். கோவிலை வலம் வந்து
பிரம்மலிகேஸ்வரர், தாயார் வடிவுள்ள மங்கை மற்றும் பரிவார
தெய்வங்களை வழிபட்டார். குளத்தின் நடுவில் உள்ள அலங்கார நந்தியம்
பெருமானையும் வணங்கினார். கோவில் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க
சிவாச்சாரியார், கோவில் சிறப்புகளை எடுத்து கூறினார். தனது வருகையை
நினைவு கூறும் வகையில், கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார்.