ADDED : ஜூலை 07, 2024 02:49 AM
புன்செய் புளியம்பட்டி:பவானிசாகர்
அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட
கேரளாவில் பெய்த மழையால், அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
தற்போது
இந்த இடங்களில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று
முன்தினம், 2,856 கன அடியாக இருந்த நீர்வரத்து, 548 கன அடியாக நேற்று
குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 68.12 அடி, நீர்
இருப்பு, 10.1 டி.எம்.சி.,யாக இருந்தது.