Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறை காருண்யா வித்யாபவன் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

பெருந்துறை காருண்யா வித்யாபவன் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

பெருந்துறை காருண்யா வித்யாபவன் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

பெருந்துறை காருண்யா வித்யாபவன் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

ADDED : மே 22, 2025 01:42 AM


Google News
பெருந்துறை, பெருந்துறை அடுத்த சிலேட்டர்புரம் காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீதம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவன் ஜெயேஷ், 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ரித்தீஷ், 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஹரித்தா, 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய, 62 பேரில், 450 மதிப்பெண்களுக்கு மேல், 14 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 29 பேரும் பெற்றுள்ளனர். பிளஸ்1 பொதுத் தேர்வில், மாணவி திவ்யநிலா, 600க்கு, 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

தற்போது பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ் 1ல் சேரும் மாணவ, மாணவியர், 10 ம் வகுப்பில், 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இருந்தால், 100 சதவீதம் பள்ளி கட்டணம் விலக்கு, 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இருந்தால், 75 சதவீதமும், 470க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருந்தால், 50 சதவீதமும், 465 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இருந்தால், 25 சதவீதமும் கட்டணம் விலக்கு அளிக்கப்படும் என, பள்ளி தாளாளர் பொன்னுசாமி தெரிவித்தார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், கற்பித்த ஆசிரியர்களையும், தாளாளர் பொன்னுசாமி பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us