/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பழைய ஆஸ்பத்திரி வீதியில் நடமாட மக்கள் அவதி பழைய ஆஸ்பத்திரி வீதியில் நடமாட மக்கள் அவதி
பழைய ஆஸ்பத்திரி வீதியில் நடமாட மக்கள் அவதி
பழைய ஆஸ்பத்திரி வீதியில் நடமாட மக்கள் அவதி
பழைய ஆஸ்பத்திரி வீதியில் நடமாட மக்கள் அவதி
ADDED : மே 22, 2025 01:42 AM
கோபி கோபி பழைய ஆஸ்பத்திரி வீதி, குண்டும், குழியாக, கரடு, முரடாக இருப்பதால் மக்கள் அவதியுறுகின்றனர்.கோபி, பெரியார் திடல் பஸ் ஸ்டாப் எதிரே, பழைய ஆஸ்பத்திரி வீதி உள்ளது. அப்பகுதி சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. அதேசமயம் மழை காலங்களில் அப்பகுதியில் மழைநீர் குட்டையாக தேங்கி நிற்பதால்,
அவ்வழியே நடமாடும் பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதிப்படுகின்றனர். தவிர, தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையில், அப்பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே, தார்ச்சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்