/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல் குவாரி மீது குற்றச்சாட்டு லாரியை சிறைபிடித்த மக்கள் கல் குவாரி மீது குற்றச்சாட்டு லாரியை சிறைபிடித்த மக்கள்
கல் குவாரி மீது குற்றச்சாட்டு லாரியை சிறைபிடித்த மக்கள்
கல் குவாரி மீது குற்றச்சாட்டு லாரியை சிறைபிடித்த மக்கள்
கல் குவாரி மீது குற்றச்சாட்டு லாரியை சிறைபிடித்த மக்கள்
ADDED : ஜூன் 22, 2025 01:21 AM
அந்தியூர், அந்தியூர் அருகே பருவாச்சி காந்திநகரில், தனியார் கல் குவாரி செயல்படுகிறது. குவாரி உரிமையாளர் அருகிலுள்ள விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து, சட்ட விரோதமாக கல் வெட்டி எடுப்பதாக, மாவட்ட கனிம வளத்துறைக்கு,
அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், குவாரியில் இருந்து நேற்று கல் ஏற்றி வந்த லாரிகளை, அப்பகுதி விவசாயிகள், மக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து சென்ற அந்தியூர் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.