பஸ்-லாரி மோதலில் 10 பயணிகள் காயம்
பஸ்-லாரி மோதலில் 10 பயணிகள் காயம்
பஸ்-லாரி மோதலில் 10 பயணிகள் காயம்
ADDED : ஜூன் 22, 2025 01:22 AM
பெருந்துறை, சென்னிமலையில் இருந்து பவானிக்கு ஒரு லாரி நேற்று காலை சென்றது. கரூரை சேர்ந்த ராஜலிங்கம், 26, ஓட்டினார். அதேசமயம் திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு தனியார் பஸ் வந்தது. பெருந்துறையை சேர்ந்த சதீஷ்குமார், 29, பஸ்சை ஓட்டினார்.
பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே திரும்பும்போது பஸ்சும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டது. இதில் பஸ்சில் பயணித்த, ௧௮ வயது முதல் ௬௧ வயது வரையிலான, ஆண், பெண் பயணிகள், ௧௦ பேர் காயமடைந்தனர். அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.