/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தடுப்பு சுவரில் மோதிய கார் விவசாயியை மீட்ட மக்கள் தடுப்பு சுவரில் மோதிய கார் விவசாயியை மீட்ட மக்கள்
தடுப்பு சுவரில் மோதிய கார் விவசாயியை மீட்ட மக்கள்
தடுப்பு சுவரில் மோதிய கார் விவசாயியை மீட்ட மக்கள்
தடுப்பு சுவரில் மோதிய கார் விவசாயியை மீட்ட மக்கள்
ADDED : ஜூன் 27, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோடு ஆணைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்,40; விவசாயி. சொந்த வேலையாக நேற்று காலை தனது ஹூண்டாய் காரில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவல்பூந்துறை சாலை, வாய்க்கால்மேடு பகுதிக்கு சென்ற போது, காரின் டயர் திடீரென வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்த ஈஸ்வரனை, அங்கிருந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு கார் கண்ணாடியை உடைத்து வெளியே மீட்டனர்.
ஈரோடு தாலுகா போலீசார், விபத்தில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.