/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலைவாழ் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க முறையீடு மலைவாழ் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க முறையீடு
மலைவாழ் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க முறையீடு
மலைவாழ் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க முறையீடு
மலைவாழ் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க முறையீடு
ADDED : ஜூன் 27, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சடையப்பன் தலைமையில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் குத்தியாலத்துார், கேர்மாளம், குன்றி உள்ளிட்ட கிராம பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குகின்றனர். ஏழை, எளிய மலைவாழ் மக்களிடம் குடிநீர் இணைப்புக்கு பங்குத்தொகையாக வீட்டுக்கு தலா, 2,000 ரூபாய் வசூலிக்கின்றனர். தவிர வரியாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் பெறுகின்றனர்.
மலைப்பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் பெரும் பின்னடைவு உள்ளது. குறைந்த அளவே தண்ணீர் வழங்கப்படுகிறது. போதிய அளவு குடிநீர் வராத நிலையிலும், மக்களை கட்டாயப்
படுத்தி வரி வசூலிக்கின்றனர்.
இதுபற்றி மாவட்ட நிர்வாகம் விசாரித்து, ஏழை, எளிய மக்கள் வசிக்கும் கடம்பூர் மலைப்பகுதியில் பொதுமக்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். அவர்களது வீடுகளுக்கான குடிநீர் இணைப்புக்கு, குடிநீர் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.