சுட்டெரித்த வெயில் முடங்கிய மக்கள்
சுட்டெரித்த வெயில் முடங்கிய மக்கள்
சுட்டெரித்த வெயில் முடங்கிய மக்கள்
ADDED : செப் 15, 2025 01:20 AM
ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் வீடுகளில்
முடங்கினர்.
ஈரோடு மாநகரில் கடந்த சில தினங்களாகவே பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலை போன்ற உணர்வு ஏற்படுகிறது. நேற்றும் வெயில் சுட்டெரித்தது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தயக்கம் காட்டி, வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர். நேற்று, 36 டிகிரி செல்சியசாகவும், 96.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து. சுட்டெரித்த வெயிலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.