/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புரட்டாசி பிறப்பதால் மீன் விற்பனை 'விறுவிறு' புரட்டாசி பிறப்பதால் மீன் விற்பனை 'விறுவிறு'
புரட்டாசி பிறப்பதால் மீன் விற்பனை 'விறுவிறு'
புரட்டாசி பிறப்பதால் மீன் விற்பனை 'விறுவிறு'
புரட்டாசி பிறப்பதால் மீன் விற்பனை 'விறுவிறு'
ADDED : செப் 15, 2025 01:20 AM
ஈரோடு:ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, 8 டன் மீன் நேற்று வரத்தானது. நாளை மறுதினம் (17ம் தேதி) புரட்டாசி மாதம் துவங்குகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் புரட்டாசி விரதம் கடைபிடிப்பர். இறைச்சி உணவுகளை தவிர்ப்பர். இதன் காரணமாக மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே கூட்டம் காணப்பட்டது. மீன்கள் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்-900, வெள்ளை வாவல்-750, கருப்பு வாவல்-500, பாறை-550, முரல்-200, மத்தி-270, சங்கரா-400, இறால் பெரியது-500, நெத்திலி-300 என்ற விலையில் விற்றது. மீன்கள் விலை சற்று குறைந்து இருந்தது. புரட்டாசி மாத வருகையால் மீன் மார்க்கெட் களை கட்டியது.