/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பட்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்பட்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
பட்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
பட்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
பட்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஜூன் 10, 2025 01:10 AM
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே சொக்கநாதமலையூரில், ஐந்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. இதுகுறித்து பட்லுார் பஞ்., நிர்வாகத்தில் மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த, 30க்கும் மேற்பட்ட மக்கள், சொக்கநாத மலையூர் பஸ் நிறுத்தத்தில், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளித்திருப்பூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால், ௨௦ நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.